தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சவால் விடுக்கும் பீட்டா
தமிழர்களின் போராட்டத்தினால் எல்லாம் ஜல்லிக்கட்டை நடத்தவே முடியாது என பீட்டா அமைப்பின் செயல் அதிகாரி பூர்வா ஜோஷிபுரா சவால் விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழர்களின் உரிமை சார்ந்த விஷயமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் மாணவர்கள் தமிழகம் முழுதுவதும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்
மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழகம் எங்கும் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
தன்னெழுச்சியாக போராடி வருபவர்களை அதிமுகவின் அராஜக அரசு காவல்துறையினரை ஏவி விட்டு அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தி கைது செய்தமைக்கும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
அதன் காரணமாக சென்னை, மதுரை, திருச்சி, நாமக்கல், நெல்லை,கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ.மாணவிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டத்தின் வீரியம் அதிகரித்து வருகிறது
இந்த நிலையில் பீட்டா அமைப்பின் செயல் அதிகாரி பூர்வா ஜோஷிபுரா இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது :-
பீட்டா அமைப்பு உலகம் எங்கும் செயல்பட்டு வருகிறது. தமிழர்களால் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் போராடி வெற்றிபெற முடியாது.
இது, நான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் வெளிப்படையாக விடுக்கும் சவால்” என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.